பிரதேசத்தின் இயற்கை வளங்கள்.
149 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு பரவி இருக்கும் பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்தில் 108 சதுர கிலோ மீட்டர்களை உள்நாட்டு விவசாயத்துக்கு உகந்த நிலப்பரப்பாகக் கொள்ளலாம். எஞ்சிய நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட வனங்கள், தரிசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் கட்டடங்களால் நிரம்பி உள்ளது.
பிரதேசத்தின் தரைத்தோற்ற அமைப்பானது மலைமுகடுகளால் மற்றும் மலைத்தொடர்களால் உருவாக்கப்பட்ட பீடபூமியின் அமைப்பை கொண்டதாகும். இப்பீட பூமி வடக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி ஓர் ஒழுங்கு முறையில் உயர்ந்து செல்கிறது.
நில்வலா கங்கையின் மேற்குத் தொகுதி கடல் மட்டத்திலிருந்து 800 அடிகள் உயரமாக அமைந்திருப்பதுடன், தொகுதியின் மேற்கு எல்லையை ஒட்டியுள்ள ஹீந்தல் கட்டு மலைத்தொடரின் உயர்ந்த மலை முகடு கடல் மட்டத்திலிருந்து 1300 அடி உயரம் கொண்டதாகும்.
மலைப் பிரதேசம் ஹுலந்தாவ கங்கை, திகிலி கால்வாய் மற்றும் நில்வலா கங்கையின் மேற்குக் கரையின் கிளை நதிகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் சில, குறிப்பாக திகிலி கங்கையின் வடக்குப் புறமாக, செங்குத்தான சரிவுகளைக் கொண்ட மிகக் குறுகிய பள்ளத்தாக்குகளாகும்.
ஆயினும், தாழ்ந்த பகுதிகள் அகன்ற பள்ளத்தாக்குகளாக தோற்றம் பெற்றிருப்பதுடன் அவை விவசாய நிலங்களாக உருவாகி உள்ளன. இருப்பினும், செங்குத்தான சரிவுகளைக் கொண்ட மலைப்பாங்கான பகுதிகளுக்கு மண் பாதுகாப்புத் திட்டமொன்று அவசியமாக உள்ளது.
நில்வலா கங்கைக்கு கிழக்கிலிருக்கும் மலை முகடுகள் தாழ்வாக இருப்பதுடன் சாதாரணமாக அவை 500 அடிகளுக்குள்ளேயே இருக்கின்றன. ஆனால், வடகிழக்கிலிருக்கும் ஊருமுத்த வெட்டிய மலைத்தொடர் மட்டும் அதிகபட்சமாக 1415 அடி உயரத்தைக் கொண்டுள்ளது.
இது மேற்குப்பகுதியைப் போன்று செங்குத்தான சரிவுகளை கொண்டிருக்காத போதிலும் மண் பாதுகாப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டால் பயனுள்ளதாய் அமையும். பிரதேசத்தை இரண்டாகப் பிரித்தவாறு வடக்கு கிழக்காக ஓடிக்கொண்டிருக்கும் நில்வலா கங்கையின் இரு புறங்களுமே இங்குள்ள மிகத் தாழ்வான பிரதேசங்களாகும்.
நில்வலா கங்கையின் கிளை ஆறுகளான நாகஹ தொல கால்வாய், ஹொரகொட நாபே கால்வாய் ஆகியன ஒன்று சேரும் தாழ்நிலப் பரப்பான தலஹகம்ஆர ஹவுபே பள்ளத்தாக்கு பிரதானமான விவசாய நிலப்பிரதேசமாகும்.
நில்வலா கங்கை பெரும்பாலான பிரதேசங்களில் ஆழமான பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்கிற போதிலும், தெற்கில் அதுரலிய மற்றும் பரதுவ பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
நில்வலா கங்கை அதன் மேற்கு புற கிளை நதிகளான திகிலி கால்வாய் மற்றும் ஹுலந்தாவ கங்கை ஆகியன தொகுதியின் பிரதான நீரோட்டங்களாக திகழ்கின்றன.
சிறு கிளை ஆறுகளான நாகஹதொல கால்வாய், ஹொரகொட நாபே கால்வாய் ஆகியனவும் இந்நீரோட்டத் தொகுதியுடன் இணைகின்றன. அதேபோன்று கிழக்குப் புறமாக வெலிஹேன, ஒளியங்கன பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசம் மற்றும் ஹாலி எல குளத்தின் ஊடாகவும் நீரோட்டம் இடம்பெறுகிறது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நதிகளை தவிர தொகுதிக்கு உள்ளடங்கும் சில நீர் நிலைகளும் காணப்படுகின்றன. ஹாலி எல குளத்தின் ஒரு பகுதி இத்தொகுதிக்கு உரியதாவதுடன் மாரம்ப குளம், ஒலுவர குளம், லேன பட்டுவ குளம், அம்பன் வெல குளம், உடலதனவள குளம் ஆகிய சிறு குளங்களும் தொகுதிக்குள் உள்ளடங்குகின்றன.
இவற்றினால் பெறப்படும் பயன் குறைவான போதும் நன்னீர் மீன்களை வளர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பிரதேசம் தாழ்நில ஈரவலயத்துக்குரிய மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை இலட்சணங்களைக் கொண்டதாகும்.சாதாரண வருடாந்த மழைவீழ்ச்சி தெற்கில் 2500 (98.4) மில்லி மீட்டராக காணப்படுவதுடன்,வட மேற்கே 3500 (137.3) மில்லிமீட்டருக்கு அதிகமாகக் காணப்படும்.
ஹாலி எலயின் சாதாரண மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் விதத்தை இரு வகையாகப் பிரிக்கலாம். மழைவீழ்ச்சி யின் 30% அளவில் ஏப்ரல், ஜூன் மாதங்களில் கிடைக்கப்பெறுவதுடன் இடைக்கிடையே நீண்ட கோடை காலமும் இடம் பெறுகின்றன. இதனால் நெற்செய்கைக்கான நீர்ப்பாசனத்துக்கு உதவிகள் அவசியமாகின்றன.
இப்பிரதேசத்தில் பிரதானமாக 02 மண் வகைகள் காணப்படுகின்றன. உயரமான பகுதிகளில் சிவப்பு-மஞ்சள் பொட்சோலிட் வகையான அமிலம் சேர்ந்த ஊடுருவக்கூடிய பாறைகள் காணப்படுகின்றன.
இவை இயற்கையான வளத்தில் குறைந்தவையாக இருந்த போதும், உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எளிதில் வளமூட்டிக்கொள்ளக்கூடியவையாகும்.
சில மலைகளிலுள்ள இம்மண்ணில் கபொக் தட்டு ஒன்று காணப்படுவதுடன் அது ஈரலிப்பைத் தக்க வைப்பதற்கும் வேர் விடுவதற்கும் தடையாக அமையக்கூடியதாகும். செங்குத்துச் சரிவுகளில் குறைந்த நீரோட்டம் கொண்ட பகுதிகளில் காய்ந்து கடினமான பாறைகள் காணப்படுகின்றன.
இந்த சிவப்பு- மஞ்சள் பொடிசொலிட் மண் இயற்கை வளம் குறைந்ததாயினும் தேயிலை,இறப்பர் போன்ற பயிர்ச்செய்கைகளுக்கு உபயோகிக்கக்கூடியதாகும். அதற்கு பசளையிடல்,மற்றும் மண் பாதுகாப்பு கட்டாயமாகும்.
தாழ்வான பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிரம்பிய சமவெளிகளில் நீரோட்டத்தின் தன்மைக்கேற்ப, நீர் சேர்ந்த சேற்று மண் காணப்படுவதுடன் அது நெற்பயிர்ச்செய்கைக்கு உகந்ததாகும்.
அகுரஸ்ஸ தொகுதியில் காடுகளால் மூடப்பட்ட பெரும்பிரதேசம் ஒன்று காணப்படுகிறது.இங்கு பாதுகாக்கப்பட்ட பிரதான வனப்பிரதேசங்கள் சில காணப்படுவதுடன் அவற்றுள் பெரியது வடமேல் திசையில் அமைந்துள்ள தெதியகல பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாகும்.