வரலாறு

சபையின் ஆரம்பமும் தற்கால நிர்வாகமும்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் இலக்கம் 453/12 ஐ கொண்ட 1978 மே மாதம் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் அக்குரஸ்ஸ பிரதேச சபை உருவாக்கப்பட்டதுடன்,இலக்கம் 485/17 ஐக் கொண்ட 1987/12/23 ஆம் திகதி வெளியான அதி விஷேச வர்த்தமானிக்கொப்ப 1988/01/01 முதல் அக்குரஸ்ஸ பிரதேச சபை செயல்பட்டு வருகிறது.

தேர்தல் ஒன்றை நடாத்தி சபை உறுப்பினர்கள் பதவியேற்கும் வரை அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முதலாவது விசேட ஆணையாளராக திரு.கித்சிரி டயஸ் அமரவர்தன 1988/01/01 இல் பதவியேற்றார்.

அக்குரஸ்ஸ பிரதேச சபைக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முதலாவது தேர்தல் 1991/05/11 இல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முதலாவது சபைத்தலைவராக திருமதி.சுனிதா திக்மாது கொட தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்குரஸ்ஸ பிரதேச சபையானது அதன் ஆரம்பம் முதல் தற்காலம் வரை கீழே காணப்படும் வகையில் விசேட ஆணையாளர்களால், தவிசாளர்களால் மற்றும் உப தவிசாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.